• Apr 29 2026

புதிய நிபந்தனையுடன் "thugh life" பட டிஜிட்டல் வியாபாரத்தை முடித்த கமல்காசன்...!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் நடித்துள்ள "thugh life " திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படம் தொடர்பான புரொமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்திற்கு ஏ .ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் வியாபாரம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


கமல்காசன் இந்த படத்தை 125 கோடி டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை செய்துள்ளார். இதுமட்டுமல்லாமல் குறித்த நிறுவனத்திடம் 8 வாரம் கழித்து ஸ்ட்ரீம் பண்ணனும் எனும் நிபந்தனையுடன் படத்தினை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் தற்போது இந்த வழியை அனைவரும் பின்பற்றுவார்கள் என கருதப்படுவதுடன் இவர் செய்த இந்த செயலினால் தியேட்டர் அதிபர்கள் பாரிய சந்தோஷத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் படம் இத்தனை கோடிக்கு விலை போனமையினால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement