• Dec 27 2024

மாமனார், மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி பாண்டியன்.. மருமகள்ன்னா இப்படி இருக்கனும்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணமான நிலையில் அசோக் செல்வனின் பெற்றோர் தங்கள் மருமகளை புகழ்ந்து பேசி வருவதை அடுத்து மருமகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது அசோக் செல்வனின் பெற்றோர் கார் பழுதாகி விட்டதாகவும் அந்த காரை பழுது செய்ய மெக்கானிக்கை அழைத்தபோது இந்த கார் இனி தேறாது என்று சொன்னபோது அசோக் செல்வனின் பெற்றோர் மிகுந்த வருத்தமானதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தான் அசோக் செல்வனை திருமணம் செய்த பின்னர் இதை கேள்விப்பட்ட கீர்த்தி பாண்டியன், தனது மாமனார் மாமியாருக்கு ஒரு மிகச்சிறந்த கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தனது கணவர் அசோக் .செல்வனிடம் இது குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

தனது அப்பாவுக்கு டொயோட்டா ஹைக்ராஸ் ஹைப்ரிட் கார் தான் பிடிக்கும்  என்று அசோக் செல்வன் கூறிய நிலையில் உடனே அந்த காரையே ரூ.31 லட்சம் கொடுத்து வாங்கிய கீர்த்தி பாண்டியன்,  இன்ப அதிர்ச்சியாக அந்த காரை தனது மாமனார் மாமியார் வீட்டின் முன்  நிறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி தனது மாமனார் மாமியாரின் திருமண ஆண்டு 1986 என்ற நிலையில் அதே எண்ணில் நம்பர் பிளேட்டையும் கீர்த்தி பாண்டியன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

தங்கள் வீட்டின் முன் புத்தம் புதிய கார் இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அசோக் செல்வனின் பெற்றோர் தங்கள் மகனுக்கு மருமகளுக்கும் நன்றி தெரிவித்ததோடு எனது மருமகள் குறித்து சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்கள் மருமகள் என்றால் இப்படி இருக்க வேண்டும், பெரிய இடத்து பெண்ணாக இருந்தாலும் மாமனார் மாமியாரை தன் அப்பா அம்மா போல் நினைத்து அன்பு செலுத்தி வருகிறார்என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement