• Oct 26 2024

நடைபெற்றுக் கொண்டிருக்கும் "கொட்டுக்காளி" ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

பரோட்ட சூரி என்று அறியப்பட்ட நகைச்சுவை நடிகரின் திரைவாழ்வில் அவரே எதிர்பாரா திருப்பமாய் அமைந்தது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம்.இந்த நகைச்சுவை நடிகனுக்குள்ளும் ஓர் நடிப்பு அரக்கனை கண்ட வெற்றிமாறன் தமிழ் திரையுலகிற்கு இன்னொரு பெரும் நடிகரை கொடுத்துள்ளார்.


விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பெரும் படங்களில் ஹீரோவாக கமிட் ஆனார் நடிகர் சூரி. அதில்  முக்கியமாக தம்பி சிவகார்த்திகேயனின் தாயரிப்பு மற்றும் 'கூழாங்கல்' திரைப்படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் "கொட்டுக்காளி"யில்  நடிக்க ஒப்பந்தமானார்.


அண்மையில் வெளியான சூரியின் கருடன் திரைப்படம் மேலும் மேலும் நடிப்பில் சூரியின் அந்தஸ்த்தை உயர்த்தியிருக்கும் நிலையில் "கொட்டுக்காளி" திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பலதை வென்றது.இந்நிலையில் "கொட்டுக்காளி" படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

Image

"கொட்டுக்காளி" படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.சர்வதேச விருதுகளை வென்றிருக்கும் சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய ட்ரைலர் அதற்கோர் தீணியாய் அமையும் என்பதில் ஐயமில்லை.



Advertisement