• Dec 26 2024

ஏணி போட்டு தான் ஏறனும் போல .. என்னடா நடக்குது இங்கே.. ஸ்ரீதேவி மகளை கலாய்க்கும் குடும்பத்தினர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு அவரது குடும்பத்தினரே கேலி செய்து கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி, போனிகபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகிலும், தென்னிந்திய திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது சகோதரி குஷி கபூர்  ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்த  நிலையில் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 23 வயதாகும் குஷி கபூர் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் அவர் வித்தியாசமான காஸ்ட்யூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

எங்கே பார்த்தாலும் ஒரே பாக்கெட்டாக இருக்கிறது, போட்டோஷூட் எடுக்க வேற ட்ரெஸ்ஸே இல்லையா, ஜான்விகபூரை விட தாராளமான கவர்ச்சியாக இருக்கு' என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பதிவுக்கு ஜான்வி கபூர் ’என்னடா நடக்குது இங்க’ ’உங்கள் காலின் மீது ஏற ஒரு ஏணியை தான் வைக்க வேண்டும் போல’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் போனி கபூர் 'எனது டிரில்லியன் டாலர் பேபி’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவும் கமெண்ட்ஸ்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement