• Dec 29 2024

எமில் ஜாக்சனாக மாறிய லியோ ஜனனி..? சொக்க வைக்கும் பேரழகு!! வீடியோ இதோ,

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவள் தான் நடிகை ஜனனி. இவர் இலங்கையில் பிரபல நியூஸ் சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய், நடிகை திரிஷா நடித்த லியோ படத்தில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அதற்குப் பிறகு இவர் லியோ ஜனனி என்று தான் அழைக்கப்பட்டு வருகின்றார்.


இவர் அதிகமாக கலாச்சார ஆடைகளையும், அடக்க ஒடுக்கமான ஆடைகளையும் அணிவதால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து உள்ளார். தற்போது கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு மத்தியில், இவர் கவர்ச்சி ஆடைகளை தவிர்ப்பது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில்,  தற்போது மதராசபட்டிணம் படத்தில் எமில் ஜாக்சன் நடித்த கெட்டப் போல ஆடை அணிந்து அவரைப் போலவே கையில் கேமராவுடன் போட்டோ ஷூட் செய்துள்ளார்.

தற்பொழுது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, அதில் ஜனனியின்  அழகை பார்த்து பலரும் மெய் சிலிர்த்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement