• Jan 01 2025

CWC சீசன் 5ன் முதல் எலிமினேஷன் யாரு தெரியுமா? முதல் வாரமே அவுட் ஆகிட்டாங்களே!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பமான ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது வாரத்தை தொட்டுள்ளது.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களாக விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, VJ பிரியங்கா, திவ்யா துரைசாமி, இர்பான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில், இந்த வாரம் கெஸ்ட் ஆக நடிகை ராதா கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் முதல் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனின் முதலாவதாக ஷாலினி சோயா வெளியேறியுள்ளார்.


அதாவது இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக சமைக்காத ஷாலினி  சோயா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் சிக்கி இருந்தனர்.


அதில் ஷாலினி சோயா தான் முதலாவதாக எலிமினேஷன் ஆகி உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில், நான் பல வருடங்களாக படங்களில் நடித்த போதும் கிடைக்காத ஒரு புகழ், இந்த ஒரு ரியாலிட்டி ஷோ கொடுத்துவிட்டது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement