• Dec 27 2024

விக்ரமுக்கு விருது கொடுக்கலனா பிரச்சனை பண்ணுவோம்! தங்கலான் பார்த்த ரசிகர்கள் கொந்தளிப்பு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான சேது படத்தின் மூலம் தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார் விக்ரம். அந்த படத்திற்காகவே மொட்டை போட்டு உடல் எடை குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை உருக வைத்து விட்டது.

இந்த படத்தில் இருந்து  அநேகமான ரசிகர்கள் விக்ரமுக்கு தீவிர ரசிகர் ஆனார்கள். அதன்பின் சாமி, தூள், தில் போன்ற கமர்சியல் படங்களில் நடித்தாலும் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதற்கான தாகம் அவரிடம் எப்போதும் இருக்கும்.

அதன்படி காசி, அன்னியன், ஐ போன்ற படங்களில் நடித்தார். ஐ படத்திற்காக அவர் காட்டிய உழைப்பு கொஞ்சம் அல்ல. உடலின் பாதி எடை வரை குறைத்து மெலிந்து கூனல் போல் நடித்து ரசிகர்களையே அசர வைத்திருந்தார். தற்போது தங்கலான் படத்திலும் தன்னை நடிப்பில் நிரூபித்து காட்டியுள்ளார் விக்ரம்.


தங்கலான் படத்தில் விக்ரமின் நடிப்பு மிகவும் அட்டகாசமாக இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றார்கள். இந்த படத்தை விக்ரமுக்கு ஆகவே பார்க்கலாம் எனவும் சொல்கின்றார்கள். வெள்ளையர்கள் மக்களை எப்படி ஒடுக்கி மிரட்டி வேலை வாங்கினார்கள் என இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் தங்கலானாகவே விக்ரம் வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு மிரட்டலாக உள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்திற்கு விக்ரமுக்கு விருது கொடுக்கவில்லை என்றால் பிரச்சனை பண்ணுவோம் என ரசிகர்கள் கூறிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பலரும் இந்த படத்திற்கு விக்ரமுக்கு கட்டாயம் விருது வழங்க வேண்டும் எனவே பரிந்துரைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement