• Dec 27 2024

தமன்னாவை கட்டிப்பிடித்த லிங்குசாமி.. பழைய ஞாபகங்கள் வந்துவிட்டதோ..?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கார்த்தி, தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’பையா’ திரைப்படம் நேற்று மீண்டும்  ரீ ரிலீஸ்  ஆகியுள்ள நிலையில் நடிகை தமன்னாவை நேரில் சந்தித்து லிங்கசாமி வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி, தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான ’பையா’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதன் குறிப்பிடத்தக்கது.

சரியாக 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ’பையா’ ரீ ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து சமீபத்தில் கார்த்தியை சந்தித்த லிங்குசாமி தற்போது தமன்னாவை சந்தித்துள்ளார். தமன்னாவை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியதோடு ’பையா’ படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்களை இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஞாபகப்படுத்திக் கொண்ட இனிமையான தருணங்கள் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’பையா’ படப்பிடிப்பின் போது கார்த்தி, தமன்னா ஆகிய இருவருமே தனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் இருவரின் நல்ல ஒத்துழைப்பு காரணமாகத்தான் இந்த படத்தை தன்னால் சீக்கிரமாக முடிக்க முடிந்தது என்றும் அப்போதே இயக்குநர் லிங்குசாமி பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் தனது மலரும் நினைவுகளை தமன்னாவை சந்தித்ததன் மூலம் கிடைத்துள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார். மேலும் விரைவில் ’பையா 2’  திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் கார்த்தி அதில் நடிக்க மாட்டார் என்றாலும் தமன்னா கண்டிப்பாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement