• Dec 26 2024

திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்கும் லோகி-ஸ்ருதிஹாசன்? கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருச்சா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த ’இனிமேல்’ என்ற ஆல்பம் நேற்று வெளியானது என்பது இந்த ஆல்பத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். ஒரு நிஜ காதலர்கள் போல், ஒரு நிஜ தம்பதியை போல் அவர்களது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்றும் இந்த ஜோடி இந்த ஆல்பத்தோடும் நின்று விடாமல் மேலும் சில படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அந்த படத்தில் தற்போது ஸ்ருதிஹாசன் இணைய போவதாக கூறப்படுகிறது.



ஆரம்பத்தில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ்-க்கு ஜோடி இல்லாமல் தான் கதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆனால் நேற்று இனிமேல் என்ற ஆல்பம் வெளியானதை அடுத்து ஸ்ருதிஹாசன் இந்த படத்திற்குள் கொண்டு வரலாம் என்று அன்பறிவ் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் அனிருத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் 237வது படத்தை இயக்க ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ்  ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு முன்பே இந்த படத்தை முடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆல்பத்தை போலவே அன்பறிவ்  இயக்கும் திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement