• Dec 26 2024

இந்த மகிழ்ச்சிக்கு காதல் மட்டுமே காரணம்- சித்தார்த் மற்றும் அதிதியின் லேட்டஸ்ட் போட்டோ- அப்போ காதலிப்பது உண்மை தானா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் சித்தார்த்.

 அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.பிரபல நடிகர் சித்தார்த் அவர்கள் நடிக்க துவங்கிய அதே ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக அடிக்கடி தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாவதுண்டு.

அதனை வெளிப்படுத்தும் விதமாக தற்பொழுது வெளிநாட்டில் இருவரும் நியூ இயரில் கட்டிப்படித்த படி எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 மேலும் சித்தார்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய சித்தா திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement