• Dec 25 2024

பிக் பாஸ் வரலாற்றில் குறைவான சம்பளத்துடன் எலிமினேட்டான ரியா? எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 42 நாட்களை கடந்து விட்டது. இந்த முறை கேர்ள்ஸ் விஎஸ் பாய்ஸ் என்ற வகையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் மொத்தமாக 18 போட்டியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் முதல் வாரத்திலேயே தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறியிருந்தார். இவரைத் தொடர்ந்து அர்ணவ், தர்ஷா  குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறினார்கள். அதன் பின்பு ஆறாவது வாரத்தில் இடம்பெற்று நாமினேஷனில் ஐந்து வைல்ட்  கார்டு போட்டியாளர்கள் சிக்கினார்கள்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த ரியா தியாகராஜன் இந்த வாரம் எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் போது தான் எலிமினேட்  ஆவேன் என்று ஒருபோதும் நினைக்காத ரியா, பிக் பாஸ் எலிமினேஷன் நேம் அறிவித்ததும் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.


மேலும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 14 நாட்களில் ஒரு நாள் கூட சோர்வாக இருந்ததில்லை. என்னை எதற்காக எலிமினேட் செய்தீர்கள் என்று ரியா கேள்வி கேட்டு அழ, ரியாவுக்கு விஜய் சேதுபதி ஆறுதல் சொல்லி வழி அனுப்பி வைத்தார்.


இவ்வாறான நிலையில் பிக் பாஸ் வீட்டில் எந்த வேலையுமே செய்யாமல் ஜாலியாக இருக்கும் சத்யா, ரஞ்சித் ஆகியோரை விட்டு விட்டு எதற்காக ரியாவை எலிமினேட் பண்ணினீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அத்துடன் மிகப்பெரிய கனவோடு வந்து எலிமினேட் ஆகி சென்ற ரியாக்கு இந்த சீசனில் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், மொத்தமாக இருந்த 14 நாட்களுக்கும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இது பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் கம்மியான சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் என்று ரியாவை தான் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

Advertisement

Advertisement