• Jan 01 2025

2வது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து? அதிர்ச்சி இன்ஸ்டா போஸ்ட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் மதுரை முத்துவின் முதல் மனைவி கார் விபத்தில் பலியான நிலையில் இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டாவது மனைவியையும் அவர் விவாகரத்து செய்ய வைப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவி, விஜய் டிவி உள்பட சின்னத்திரைகளில் பிரபலமானவர் மதுரை முத்து என்பதும் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் அவர் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த போது திடீரென அவரது மனைவி லேகா கார் விபத்தில் சிக்கி பலியானார்.

இதனை அடுத்து குழந்தைகளுக்காக அவர் லேகாவின் நெருங்கிய தோழியான நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் முத்துவின் இரண்டாவது மனைவி நீத்து தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் செய்துள்ள பதிவுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும், அவருக்காகவே நான் பொட்டு வைத்து பூ வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு அவர் தனது திருமண வாழ்வின் அதிருப்தியை மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் விரைவில் முத்து - நீத்து விவாகரத்து நடைபெறலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement