• Dec 26 2024

திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ‘மலர்’ சீரியல் நடிகை.. என்ன ஆச்சு?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ என்ற சீரியலில் நடித்து அதன் பின் அந்த சீரியலில் இருந்து விலகி விட்ட நடிகை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மலர்’ என்ற சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை நிவிஷா. இந்த நிலையில் திடீரென அந்த தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது அவர் சமீப காலமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடல்நிலை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு குணமாகி வருகிறது என்றும் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமாக வாழ்த்துக்கள் என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் வேறு ஒரு முன்னணி தொலைக்காட்சியில் உள்ள சீரியலில் நடிப்பதற்காக தான் ‘மலர்’ சீரியலில் இருந்து நிவிஷா விலகினார் என்று கூறப்பட்டாலும் அவர் நடிக்கும் அடுத்த சீரியல் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும் அவர் எதற்காக ‘மலர்’ சீரியலில் இருந்து வெளியேறினார் என்பதை அவர் இன்று வரை விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது ‘மலர்’ சீரியலில் நிவிஷா நடித்த கேரக்டரில் சுனிதா ஸ்ரீநிவாசன் என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement