• Dec 27 2024

புருஷன் கூட ஒழுங்கா வாழ தெரியலை, நீயெல்லாம் அட்வைஸ் பண்றியா? ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலடி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


கணவருடன் ஒழுங்காக வாழ தெரியாமல் விவாகரத்து செய்துவிட்ட நீ எல்லாம் அட்வைஸ் பண்றியா? உன்னுடைய அட்வைஸ் எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்த நிலையில் அவருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா கடந்த  சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது நோயில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்ட சமந்தா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், அவர் நடித்து வந்த ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் தனது கணவரின் பிரிவு குறித்து பேசிய போது ’என்னுடைய வாழ்க்கையில், தனிப்பட்ட ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தான் வாழ்ந்து விட்டேன், ஒரு கட்டத்தில் தனிப்பட்ட ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்ததால் கணவரை விட்டு பிரிந்தேன்’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் சில அறிவுரைகளை கூறியிருந்த நிலையில் அந்த அறிவுரையை கேட்க முடியாது என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்த ரசிகர் ’நீங்கள் ஏன் கணவனை விட்டு பிரிந்தீர்கள்? திருமணமாகி கணவருடன் ஒழுங்காக வாழ கூட தெரியாத நீங்கள் அட்வைஸ் சொல்ல தகுதியற்றவர், உங்கள் அறிவுரைகளை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்று கூறி இருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா ’இந்த அளவுக்கு வெறுப்பை மனதில் விதைத்து உள்ள நீங்கள், வெறுப்பு நோயிலிருந்து விரைவில் மீண்டு வர நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியிருந்தார். சமந்தாவின் இந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement