• Dec 26 2024

‘மங்காத்தா’ தயாரிப்பாளர் துரை அழகிரி கோமாவில் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்தமங்காத்தாஉள்பட சில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் துரை தயாநிதி திடீரென மயங்கி விழுந்து கோமா நிலையில் உள்ளதாகவும் அவர் கடந்த சில மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 அஜித் நடித்தமங்காத்தா’, சிவா நடித்ததமிழ்ப்படம் உள்பட சில படங்களை தயாரித்தவர் துரை தயாநிதி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் சென்னையில் துரை தயாநிதி தனது வீட்டில் திடீரென கடந்த டிசம்பர் மாதம் மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மூளை ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிகிறது.

 துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அவரது உடல்நிலை குறித்து எந்த விதமான தகவலையும் மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழக அமைச்சர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

 துரை தயாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறினாலும் அவரது உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement