• Dec 26 2024

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணையும் புதிய புரொஜக்ட்.. டைட்டில் போஸ்டர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் உருவாக்கும் மியூசிக் வீடியோ ஆல்பம் குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்து பாடி உருவாக்கும் இந்த பாடலை கமல்ஹாசன் எழுதி இருப்பதாகவும் இந்த ஆல்பத்திற்கான முக்கிய ஆலோசனைகளை லோகேஷ் கனகராஜ் கூறி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த தகவல்களை உறுதி செய்யும் இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ’இனிமேல்என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஆல்பத்தை துவாரகேஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாசனின் காஸ்ட்யூமை பல்லவி சிங் கவனிக்க இந்த பாடல் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ஆல்பம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின்விக்ரம்படத்தை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் மியூசிக் ஆல்பத்திற்கும் பணிபுரிந்துள்ளார் என்பதும் அதேபோல் கமல்ஹாசனின் ஒரு சில படங்களுக்கு பாடல்களை பாடியுள்ள ஸ்ருதிஹாசன் தற்போது தனி பாடல் கொண்ட மியூசிக் ஆல்பத்தை உருவாக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement