• Mar 04 2025

பணத்தை திருப்பி கேட்ட முத்து..! செய்வதறியாது தவிக்கும் மனோஜ்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , மனோஜ் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்ட வாரான். அப்ப விஜயா மனோஜ் பாத்து கவனமா வா என்கிறார். வீட்டுக்கு வந்த விஜயா மீனாவ ஆராதித்தி கரைச்சுக்கொண்டு வரச் சொல்லுறா. பிறகு அதமீனாட்ட இருந்து பறித்து விஜயா தான் ஆராத்தி காட்டுறா. அப்ப இதோட உன்ட கஷ்டம் எல்லாம் போய்டனும் என்கிறார்.

அதைத் தொடர்ந்து அண்ணாமலை மனோஜை இனிமேலாவது இப்படி எல்லாம் துரத்திக் கொண்டு போகாத அவன எங்கயாவது கண்டா பொலிஸுக்கு சொல்லு என்கிறார். அதுக்கு முத்து அப்பா அவன் ஆக்சன் ஹீரோ மாதிரி ஏதொ ட்ரை பண்ணியிருக்கான் கடைசில அது காமெடியா முடிஞ்சிட்டு என்கிறார். அதுக்கு ரோகிணி அவரே இப்ப தான் வந்திருக்கிறார் உடனே அவர கிண்டல் பண்ணணுமோ என்று கேக்கிறார்.


பிறகு அண்ணாமலை மனோஜ் நீ கொஞ்ச நாளுக்கு ரெஸ்ட் எடு என்கிறார். பின் விஜயா மனோஜ்க்கு நல்ல படியா பார்வை வந்திட்டா கோவிலுக்கு வந்து அங்கப்பிரதட்ஷனை செய்யுறதாக வேண்டிக்கிட்டேன் என்றார். அதுக்கு மனோஜ் ஏன் அம்மா இப்படி கடுமையா எல்லாம் வேண்டுறீங்கள் என்று கேட்டார். உடனே விஜயா இத நான் செய்யுறது என்று வேண்டேல நீங்க ரெண்டு பேரும் தான் செய்யுறது என்றார். அதுக்கு ரோகிணியும் மனோஜும் ஷாக் ஆகுறார்கள்.

முத்து இதைக் கேட்டு சிரிச்சுக் கொண்டிருக்கான். பிறகு அண்ணாமலை மனோஜுக்காக ஹாஸ்பிடல்ல கட்டின பில்லை மனோஜிட்ட குடுத்திட்டு அந்த காசைத் தரச்சொல்லிச் சொல்லுறார். அதுக்கு மனோஜ் கோவப்படுறான். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement