• Dec 26 2024

பேட்டி கொடுக்க விருப்பமில்லை.. பதறி போன மன்சூர் அலி கான்! கேப்டன் மறுபடியும் வருவாரா ?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

மன்சூர் அலி கான் ஒரு இந்திய நடிகர் இசையமைப்பாளர் , எழுத்தாளர் , மற்றும் தயாரிப்பாளர் இவர் பெரும்பாலும் விரோதமான , துணை வேடங்களில் நடித்தாலும் தனது நகைச்சுவையாலும் , நடிப்பாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் . 

இவர் கேப்டன் விஜகாந்தின்  மறைவை பற்றி ஒரு பேட்டியின் போது மிகவும் வருத்தமாக கூறியதாவது ,

இறுதி கிரியைகள் முடிந்த பிறகு தான் வந்தேன் . மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு , எனக்கு விஜயகாந்த் நட்பு என்று எல்லாம் சொல்ல முடியாது .  அவர் கேப்டன் தான் . அவருடைய 100ஆவது படம் என்னுடைய முதல் படம் .


பேட்டியே கொடுக்க கூடாது என்று கட்டுப்படுத்திட்டு இருந்தேன் . நீங்க கட்டாயப்படுத்த தான் கொடுக்கிறேன். கேப்டன் மறைவுல இருந்து நான் இன்னும் வெளிய வரவில்லை . 

கேப்டன் நோய்வாய்ப்பட்டு உடல் நிலை சரி இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாரு . மிகவும் ஒரு செயல்லிழந்த ஒரு மனிதராக இருந்தார் . நிஜமாவே அவங்க பார்க்க முடியாத நிலையில தான் இருந்தாங்க . அவரோட மறைவை என்னால தாங்கவே முடியல  மன வருத்தமாக தெரிவித்த மன்சூர் அலி கான்.

Advertisement

Advertisement