• Apr 18 2026

தாய்லாந்து போய் பாக்சிங் பழகும் ‘கோட்’ நடிகை.. விஜய்யுடன் ஆக்சன் காட்சியா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகை தாய்லாந்து சென்று பாக்ஸிங் பழகிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் அவர் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆக்சன் காட்சிகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக சினேகா, லைலா, பார்வதி மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்து வரும் நிலையில் மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் தனது குடும்பத்துடன் தாய்லாந்து சென்றார். அங்கு அவர் பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் சற்றுமுன் அவர் அந்நாட்டில் உள்ள பாக்சிங் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

இந்த புகைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி தாய்லாந்து நாட்டின் பாக்ஸிங் வீரரிடம் தான் அந்த கலையை பயின்று வருவதாகவும் தனது தனக்கு மிகவும் விருப்பமாக இருந்ததாகவும் இந்த கலையை கற்றுக் கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார். 

இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் மீனாட்சி சவுத்ரிக்கு ஒரு ஆக்ஷன் காட்சி இருக்கிறது என்றும் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் காட்சியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகத்தான் அவர் தாய்லாந்து சென்று பாக்ஸிங் கலையை பயின்று வருவதாகவும் தெரிகிறது.



Advertisement

Advertisement