• Dec 26 2024

கண்ட இடத்தில் கையை வைத்ததால் ஏற்பட்ட பிரச்சனை.. அனுபமா பரமேஸ்வரனுக்கு சிக்கல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கண்ட கண்ட இடத்தில் கை வைத்ததால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் நடித்த ஒரு படத்தின் புரமோஷன் விழாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ’தில்லு ஸ்கொயர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் நாளை வெளியாக உள்ளது என்பது பலர் அறிந்ததே.

 இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்று நேற்று ஐதராபாத்தில் நடந்த நிலையில் இந்த விழாவுக்கு அனுபமா பரமேஸ்வரன் வரவில்லை. இது குறித்து இந்த படத்தின் நாயகன் சித்து பேசியபோது ’நேற்று வெளியான ஒரு போஸ்டர் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனம் வந்ததால் தான் அனுபமா பரமேஸ்வரன் இந்த விழாவுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.



 ஒரு நடிகையை விமர்சனம் செய்யும் போது கவனமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றும், இது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயம் என்றும், திரை உலகினர்களை மிகவும் கேவலமாக நினைக்க வேண்டாம் என்றும் முகம் தெரியாத நபர்களின் விமர்சனத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம் என்றும் தெரிவித்தார். 

மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்ததால்தான் அனுபமா பரமேஸ்வரன் இன்றைய விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சித்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த புரமோஷன் விழாவுக்கு முந்தைய நாள் ’தில்லு ஸ்கொயர்' படத்தின் ஸ்டில் ஒன்று வெளியான நிலையில் அதில் அனுபமா, சித்துவின் தொடை அருகே கை வைத்து இருந்ததை குறித்து தான் நெட்டிசன்கள் மோசமான சில விமர்சனங்களை பதிவு செய்தனர் என்பதும் இது அனுபமா பரமேஸ்வரனின் மனதை மிகவும் வருத்தம் அடைய செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement