இளையராஜா தமிழ் திரை உலகில் தனித்துவமான இசையை உருவாக்கி, உலக அளாவிய ரீதியில் புகழ் பெற்றவர். இவர் தனது திறமையின் மூலம் 1000 க்கும் மேற்படட பாடல்களை இயற்றியதுடன் ஏராளமான விருதுகளையும் பெற்றுக்கொண்டார். இளையராஜாவின் தனித்துவமான இசை நடை மற்றும் இயற்கையை உணர்த்தும் பின்னணி என்பன ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளன.
அத்தகைய இளையராஜா மகள் பவதாரணியின் பெயரில் பெண்களுக்கு மட்டுமான புதிய இசைக்குழுவை உருவாக்கும் திட்டம் குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இது இசைத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இளையராஜா தன் இசை வாழ்க்கையில் முழுவதும் ஆண்கள் ஆதிக்கம் உள்ள இசைக்குழுக்களிலேயே வேலை செய்து வந்துள்ளார். தற்போது, அவரது புதிய முயற்சி பெண்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்குழுவை உருவாக்குவதே என்பதால், இது புதிய பாதையை உருவாக்கும் முயற்சி என நம்பப்படுகிறது.
இவரது இம்முயற்சியால் பெண்கள் இசைத்துறையில் அதிகமாக பங்கெடுக்க கூடியதாக உள்ளதுடன் பெண்களின் கலை திறனுடன் தனது இசையை இணைப்பதே ஆகும். இளையராஜாவின் இந்த முயற்சி இசைத்துறையில் பெரும் விவாதத்திற்குப் உள்ளாகியுள்ளது. ஏனெனில் சிலர் "இது பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்" என்று பாராட்டினாலும் சிலர் "இசைக்கான திறமையில் பாலினத்தைக் கணக்கில் எடுக்கக் கூடாது" எனக் கூறுகின்றனர்.
Listen News!