• Dec 25 2024

நண்பா நண்பி ரெடியா! இதோ வெளியானது தளபதி 69 படத்தின் அப்டேட்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

அநேகமான ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் என்றால் அது இளையதளபதி விஜய் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியும் ஆரம்பித்துள்ளார்.


இவர் அரசியலுக்குள் நுழைந்தது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைப் பிரபலங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல கோடிக்கணக்கான சம்பளம் கொடுத்து அவரை வைத்து படம் எடுப்பதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரெடியாக உள்ளார்கள். ஆனாலும் இளைய தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்திற்கு பிறகு தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து முற்றாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 


மேலும் விஜய்யின் கடைசி படத்தை KVN Productions தான் தயாரிக்கவுள்ளார்களாம். ஹெச். வினோத் தான் தளபதியின் 69 திரைப்படத்தினை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தளபதியின் இறுதி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மிருந்த சோகத்துடன் இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பும் தற்போது அழகிய வீடியோ ஒன்றுடன் வெளியாகி இருக்கிறது.  





Advertisement

Advertisement