• Dec 27 2024

‘நீ நான் காதல்’ சீரியல் நடிகருக்கு நடந்த பிரம்மாண்ட திருமணம்! மணமகள் திரைப்பட நடிகையாம்! புகைப்பட தொகுப்பு இதோ...

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் விஜய் டிவியில் ’நீ நான் காதல்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர், சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில், பிரேம் ஜேக்கப் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்வாசிகாவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். 

இருவீட்டார் சம்மதத்துடன் கேரளாவில் நடந்த இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்ன திரையுலகினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நடிகை ஸ்வாசிகா ‘வைகை’ என்ற படத்தில் அறிமுகமாகி,  ’கோரிப்பாளையம்’ ’சாட்டை’ ’அப்புச்சி கிராமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement