• Dec 26 2024

’நெஞ்சத்தை கிள்ளாதே’ சீரியலின் கதை இதுவா? ஆரம்பமாகும் தேதி, நேரம் அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவி, விஜய் டிவி போலவே ஜீ தமிழ் டிவியிலும் அவ்வப்போது புதிய சீரியல் தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற புதிய சீரியல் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்த நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாகவும், ரேஷ்மா முரளிதரன் ஹீரோயினியாகவும் இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். இருவரும் தங்கள் வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சீரியலின் கதை ’காலம் கடந்த காதல் கதை’ என்ற வரியுடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருமணத்திற்கு பின்னர் உள்ள காதல் கதையாகவும் அந்த காதலில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வு தான் இந்த சீரியலின் கதை என்றும் கூறப்பட்டு வருகிறது. ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் ஆகிய இருவரும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பின்னால் ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் அலசி ஆராய்ந்து அதற்கு புத்திசாலித்தனமான முடிவை எடுக்கிறார்கள் என்பது தான் கதை என்று சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த தொடரில் நான்சி மற்றும் சசிந்தர் ஆகிய இன்னொரு ஜோடி நடிக்க இருப்பதாகவும் இவர்கள் ஜெய் ஆகாஷ், ரேஷ்மாவின் இளமைக்கால கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த சீரியல் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீரியல் எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பை பெற போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement