• Dec 26 2024

106 வயதில் பறந்து பறந்து சண்டை போட முடியுமா? ‘இந்தியன் 2’ படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டிரைலரை கமல் ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் இந்த டிரெய்லரில் உள்ள சில காட்சிகளை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். குறிப்பாக ’தசாவதாரம்’ திரைப்படத்தில் அவருடைய 10 கெட்டப்புகளும் இயல்பாக இருந்த நிலையில் இந்த படத்தில் உள்ள சில கெட்டப்புகள் செயற்கைத்தனமாக இருப்பதாக கருத்து கூறப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போதைய காலத்தில் ஊழல் என்பது பொதுமக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக ஒரு விஷயமாகிவிட்டது. பொதுமக்களே ஊழலுக்கு பழகிவிட்ட நிலையில் அதை பெரிதுபடுத்தி மீண்டும் ஒரு படத்தை எடுத்திருப்பது ஷங்கரிடம் சரக்கு இல்லை என்பதையெ காட்டுகிறது என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த டிரைலரில் உள்ள ஒரு  காட்சியில் கமல்ஹாசன் புகைப்படத்தை போலீசார் பார்ப்பது போன்றும், அதில் கமல்ஹாசனின் பிறந்தநாள் 30.4.1918 என இருப்பதையும் பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதன்படி பார்த்தால் இந்தியன் தாத்தாவுக்கு 106 வயது ஆகிறது என்றும் 106 வயதில் ஒரு மனிதர் எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும் என்றும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா என்று ஷங்கரை கலாய்த்து வருகின்றனர். என்னதான் ஆரோக்கியமானவராக இருந்தாலும் வர்மக் கலையை கற்று இருந்தாலும் 106 வயதில் அவர் எப்படி ஒரு பெரிய அரசாங்கத்தை எதிர்த்து சண்டை போட முடியும் என்றும் கேள்வியையும் எழுப்பி  வருகின்றனர்.

’இந்தியன்’ ரிலீஸாகும் போது சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் இல்லை என்பதால் பல விமர்சனங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் தற்போது இணையதளங்களில் இந்த படத்தின் டிரைலர் கலாய்க்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement