• Dec 28 2024

திருமணத்திற்கு முன் உனக்கு குழந்தைகள் இருக்கிறதா? என் அம்மா கேட்ட அதிர்ச்சி கேள்வி.. நிவேதா தாமஸ்

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

உனக்கு திருமணமாகி விட்டதா? குழந்தைகள் இருக்கிறதா? என்று என் அம்மாவே என்னிடம் கேள்வி கேட்டார்கள் என நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜின் சமீபத்திய சமூக வலைதள பதிவு மூலம் அவருக்கு விரைவில் திருமணம் ஆக போவதாக பல இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிவேதா தாமஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நான் என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஹார்ட் சிம்பலுடன் ஒரு பதிவு செய்தேன். உடனே எனக்கு திருமணம் ஆக போவதாக பலர் செய்தியை கிளப்பி விட்டார்கள். இந்த செய்தியை பார்த்து என்னுடைய அம்மா உனக்கு திருமணம் ஆகி விட்டதா? குழந்தைகள் ஏதும் இருக்கிறதா? என்று கிண்டலாக என்னிடம் கேட்டார்.


அந்த பதிவு நான் நடிக்கும் படம் பற்றிய ஒரு பதிவு, ஆனால் அதை பார்த்து நிறைய பேர் எனக்கு திருமணம் என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள், அந்த படத்தின்படி எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், என்னுடைய முதல் மகன் பெயர் அருண், இரண்டாவது மகன் பெயர் வருண். இந்த படத்தில் எனக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் கேரக்டர் கிடைத்தது, அந்த கேரக்டரில் நானும் நன்றாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.

நிவேதா தாமஸ் இந்த விளக்கத்தை அடுத்து அவருக்கு இப்போது திருமணம் இல்லை என்றும் திரையுலகில் தான் இன்னும் சில ஆண்டுகள் கவனம் செலுத்த போகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக நிவேதா தாமஸ்க்கு திருமணம் என்று பரவி வந்த வதந்திக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement