• Dec 26 2024

பாலியல் குற்றத்தில் நிவின் பாலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! இறுதியில் நடந்தது என்ன!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள நடிகர் நிவின் பாலி 40 வயதான பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.


மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்றும்,அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறியிருந்தார்.


நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

d_i_a

இயக்குநர் வினித சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி காலை வனா படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் இயக்குநர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement