• Mar 04 2025

இப்படியொரு ரிஸ்க்க யாருமே எடுத்து இருக்க மாட்டாங்க.! ஊர்பி ஜாவேதின் புதிய வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

1997 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் தான் நடிகை  ஊர்பி ஜாவேத். இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். அதன் பின்பு சின்னத்திரை, மாடலிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பிக்பாஸ் ஓடிடியில் பங்கு பற்றிய இவர், ஒரு வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு சோசியல் மீடியாவில் ஹார்ட் டாபிக் ஆகவே காணப்படுகின்றார். மேலும் தான் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் உடுத்தும் ஆடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார்.

இதனால் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோசியல்  மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவற்றில் ஒரு சில ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் பல நேரங்களில்  ஊர்பி ஜாவேத் உடுத்தும் ஆடைகள் முகம் சுளிக்க வைப்பதாகவே காணப்படுகின்றன.


இவருடைய வித்தியாசமான டிரஸ் சென்சுக்கு பின்னாடி தனிப்பட்ட குழு ஒன்றே பணி புரிகின்றதாம்.  இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றார்கள். 

இந்த நிலையில்,  ஊர்பி ஜாவேத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக கெட்டப் ஒன்றை போட்டுள்ளார். தற்போது குறித்த வீடியோவை வருகிறது.

Advertisement

Advertisement