• Mar 04 2025

சூர்யா அடுத்து இணையவுள்ள கூட்டணி..! இயக்குநர் யார் தெரியுமா..?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய கங்குவா திரைப்படம் ஒரு சில தவறான விமர்சனங்களினால் படம் தோல்வியை சந்தித்து. இருந்தாலும் நடிப்பின் நாயகன் சூர்யாவின் நடிப்பு மாஸாக இருந்ததாக பெரும்பாலானோர் கூறிவந்தனர். இப் படம் 300 கோடி செலவில் எடுத்தமையினால் இது பொருளாதார ரீதியில் ஒரு பெரிய இழப்பினை ஏற்படுத்தியது.


இப் படத்தின் பின்னர் சூர்யா ரெட்ரோ ,சூர்யா 45 படங்களில் நடித்து வருகின்றார். ரெட்ரோ படம் மே மாதம் முதலாம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்தின் கண்ணாடி பூவே பாடல் தற்போது வெளியாகி மாஸ் வைரல் ஆகி வருகின்றது.


இந்த நிலையில் சூர்யா 46 படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தினை லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதுடன் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் கதாநாயகி பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளார். இந்த படத்தினை Sitara Entertainment தயாரிப்பில் ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளதாக  அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement