• Dec 26 2024

பாட்டிலுக்குள் சிம்மாசனம்.. அடுப்பிற்குள் நாய்.. என்ன சொல்ல வருகிறார் பா ரஞ்சித்? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரஞ்சித்துக்கு சொந்தமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சில திரைப்படங்கள் தயாராகி வருகின்றன என்பது தெரிந்தது. சமீபத்தில் கூட தினேஷ் நடிக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ’பாட்டல் ராதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த பர்ஸ்ட் லுக்கே கதையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. 

அரசர்கள் உட்காரும் சிம்மாசனம் ஒன்று மது பாட்டிலுக்குள் இருப்பது போன்றும் அந்த சிம்மாசனத்தில் குரு சோமசுந்தரம் கையில் சரக்குடன் உட்கார்ந்து இருப்பது போன்றும் உள்ளது. மேலும் இந்த பாட்டிலின் கீழே கொத்தனார் வைத்திருக்கும் கரண்டி இருப்பதை எடுத்து இந்த படத்தின் நாயகன் கொத்தனார் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. 

அதுமட்டுமின்றி ஒரு சிலேட்டில் குடும்ப ஓவியம் வரையப்பட்டிருப்பதும், அதன் அருகில் அடுப்பில் ஒரு நாய் இருப்பதை பார்க்கும்போது அந்த குடும்பம் வறுமையில் வாடுகிறது என்றும் அடுப்பு பற்ற வைத்து பல நாட்கள் ஆகிறது என்பதும் சிம்பாலிக்காக காட்டப்பட்டுள்ளது. 

மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறது என்பதை உணர்த்தும் படமாக இந்த ’பாட்டல் ராதா’ படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்க இருப்பதாகவும் ஷான் ரோல்டன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்த வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement