• Dec 27 2024

மலேசியா போறீங்களே.. ரோகிணி அப்பாவை பார்த்திங்களா? மீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை கோமதி பிரியா மலேசியா சென்று இருக்கும் நிலையில் அங்கு ரோகினி அப்பாவை பார்த்தீர்களா? என அவர் பதிவு செய்திருக்கும் வீடியோவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் உள்ளது என்பதும் இந்த தொடரில் முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி, ரவி - ஸ்ருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய எட்டு கேரக்டர்கள் பார்வையாளர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தற்போது மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ளார் என்பதும் இதே நிகழ்ச்சியில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் கலந்து கொண்டுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே வெற்றி வசந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் மலேசியாவை சுற்றி பார்க்கும் போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது கோமதி பிரியாவும் மலேசியா புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக அவர் இரட்டை கோபுரத்தின் முன் நின்று எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

குறிப்பாக ரோகிணி அப்பாவை மலேசியாவில் பார்த்தீர்களா? எப்படியாவது ரோகிணியின் பிராடு தனத்தை வெளிப்படுத்துங்கள்? சீரியலில் ரொம்ப அப்பாவியா இருக்கிறீர்கள்? நீங்கள் தான் உண்மையான மலேசியா ராணி,  மலேசியா மாமாவை விடாதீர்கள், கண்டுபிடித்து அடியுங்கள்’ போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement