• Dec 25 2024

ராதிகா வீட்டுக்கு பாக்கியா கொடுத்த ஷாக்.. கொண்டாட்டத்தில் ஈஸ்வரி! கோபியும் கூட்டு சேர்ந்திட்டாரே!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ஈஸ்வரிக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்புகிறார். ஆனால் ராதிகா பக்கத்தில் நிற்கவும் அவரை ஒரு வார்த்தை சாப்பிட்டியா என்று கேட்கவில்லை. இதனால் கமலா ராதிகாவுக்கு நன்றாக ஏற்றி விடுகிறார்.

இதை தொடர்ந்து கிச்சனில் அமிர்தா, ஜெனி, பாக்யா சமைத்துக் கொண்டு இருக்க, அங்கு இனியா வருகிறார். ஆனால் எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பதால் தனக்கும் வேலை சொல்லுவாங்க என திரும்பி செல்ல நினைக்கையில், பாக்கியா  அவருக்கும் வேலை கொடுத்து அமர வைக்கிறார்.

அந்த இடத்திற்கு ராமமூர்த்தி வந்து ஒரு மாதிரியாக இருக்க, என்ன நடந்தது என்று கேட்க, ஈஸ்வரிக்கு கால் பண்ணன், அவ ஒரு மாதிரி  தான் பேசினா அதனால போய் பாத்துட்டு வருவோமா என்று அமிர்தா கிட்ட கேட்க, நான் எப்படி என்று அமர்தா, ஜெனி, இனியா  மூவரும் போவ மறுக்க, பாக்யா நான் வருகிறேன் என சாப்பாடும் கட்டிக் கொண்டு செல்கிறார்.


ராதிகா வீட்டுக்கு ராமமூர்த்தியும் பாக்கியாவும் செல்ல, அவர்களைப் பார்த்து ராதிகாவும் கமலாவும் ஷாக் ஆகின்றார்கள். மேலும் ஈஸ்வரி வந்து பாக்யாவை பாசமாக வா மா என அழைக்க, ராமமூர்த்தியும் நலம் விசாரித்து விட்டு பாக்கியா ஈஸ்வரிக்கு சாப்பாடு வைத்து கொடுக்கிறார். இதன்போது ஈஸ்வரி வேணும்  என்று பாக்யாவின் சாப்பாடு பற்றி புகழுகிறார்.

இதை பார்த்து கோபத்தில் ராதிகாவும் கமலாவும் இருக்க, கோபியும்  சாப்பாட்டுடன் வருகிறார். அங்கு அப்பாவின் சத்தம் கேட்டதும் அவரும் அங்கு சென்று சந்தோஷமாக சிரித்து கதைக்க, கோபி பக்கத்தில் பாக்கியா இருப்பதை பார்த்து ராதிகா இன்னும் கடுப்பாகிறார்.

மறுபக்கம் செழியன் பாக்கியவிடம் தனக்கு ஸ்கிரிப்ட் எழுத வரவில்லை என்று புலம்பி கொண்டிருக்க, பாக்கியா அவருக்கு அட்வைஸ் கொடுத்து ஒரு டீயும் ஊத்தி கொடுத்து பக்கத்திலேயே இருந்து அவரை எழுத வைக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement