• Dec 26 2024

கத்தியை காட்டி கோபியை மிரட்டிய பாக்கியா.. கோமாளியான பழனி! பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமி தான் வாங்கிய டீ சேர்ட்டை போட்டு வந்து தனது அம்மாவிடம் காட்ட, யாரப்பா நீ உன்னை அடையாளமே காண முடியவில்லை அஞ்சு வயசு குறஞ்ச மாதிரி இருக்குது என்று பாராட்டி, நேற்று உங்க அப்பா கனவுல வந்தாரு சீக்கிரமா உனக்கு கல்யாணம் நடக்கும் என்று சொன்னாரு அதே மாதிரி நடக்க போகுது என்று சந்தோஷப்படுகிறார்.

அதன்பின் பாக்கியாவை பார்ப்பதற்காக ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி  வருகிறார் பழனி.  அங்கு ரெஸ்டாரண்டில் ஆர்டர் கொடுத்தவர் ஒருவர் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது என சத்தம் போட்டுக் கொண்டிருக்க பாக்யா அவருக்கு பாதி பணத்தை கொடுத்து அவரை சமாதானப்படுத்தி அனுப்புகிறார். 

அங்கு வந்த பழனிச்சாமியின் காஸ்ட்ரூமை பார்த்த அமிர்தா, செல்வி என்ன அண்ணனுக்கு பத்து பதினைந்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கிறீங்க என்று பாராட்டுகிறார்கள். மேலும் அக்கா உள்ள தான் இருக்க போய் பாருங்க என அனுப்பி வைக்கிறார்.


உள்ளே போன பழனியை வேலையில் இருந்த பிசியால் பாக்கியா  கவனிக்கவில்லை. ஏதாவது சொல்லுவாங்க என எதிர்பார்த்து இருந்த அவருக்கு பாக்யா பதில் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். மேலும் நீங்க வாங்கி கொடுத்த புக்கால ஒரு ஐடியா கிடைச்சுது. காலையில ஏற்பட்ட பிரச்சினை சால்வ் பண்ணிட்டேன் என்று ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக் கொண்டிருக்க பழனி இது சரிப்பட்டு வராது என கிளம்புகிறார்.

ஆனாலும் பழனியை கூப்பிட்ட பாக்யா அம்மாவுக்கு நாட்டுக்கோழி குழம்பு வச்சி தாரேன்னு சொன்னன். அடுத்த வாரம் வீட்ட வந்து வச்சு தாரேன் என்று சொல்லுகிறார்.  பழனிச்சாமி காரில் போகும் போது  ராஜதந்திரங்கள் எல்லாம் வீணா போச்சு என்பது போல புலம்புகிறார். ஒரு வார்த்தை சரி சொல்லி இருக்கலாம் என புலம்பி தவிக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா ரெஸ்டாரண்டில் தங்கச்சி கர்ப்பமாக இருக்கிறதால ஹாஸ்பிடல் போகணும் என ஒருவர் கேட்க, அவரும் லீவு கொடுக்கிறார். ராதிகாவின் கர்ப்பம் பற்றியும் யோசிக்கிறார். அந்த நேரத்தில் பழனி டிரஸ் பாத்தியா? எப்படி இருக்கு என செல்வி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, யார் என்ன மனநிலைல இருக்காங்க என்று தெரியாமல் இப்படி எல்லாம் பேசுவியா என அவரை திட்டி அனுப்புகிறார். அந்த நேரத்தில் அமிர்தாவும் பழனிச்சாமி சார் ஒரு நல்ல பிரண்டு தான் என்று சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா கிச்சனில் இருக்கும்போது கோபி தனது கிளவுட் கிச்சன் பிசினஸ் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு பாக்கியாவை வெறுப்பேற்றுகிறார். மேலும் இங்க வச்ச பாதாம் பிஸ்தாவை காணலையே என்று தேடிக் கொண்டிருக்க, பாக்கியா கத்தியை காட்ட ஓடிவிடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement