• Dec 26 2024

சரவணனுக்கு ரூம் இல்லையா? என்ன முத்து-மீனா கதை போல வருதே.. தங்கமயில் அம்மா ஓவர் நடிப்பு சொதப்புமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் ராஜி மற்றும் கதிர் ரொமான்ஸ், மீனா கேலி செய்வது, தங்கமயில் அம்மா, அப்பா திடீரென பாண்டியன் வீட்டிற்கு வந்து பேசும் உரையாடல் மற்றும் கல்யாண பத்திரிகை அடித்துள்ளது ஆகிய காட்சிகள்  இடம் பெற்றுள்ளது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு வழியாக தனது மூன்று மகன்களையும் மீட்டு வந்த பாண்டியன் நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டு வேலையை பாருங்கள் என்று அறிவுரை கூறுகிறார். மேலும் தனது மகன்கள் தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதையும் கோமதியிடம் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த நிலையில் ராஜியின் அண்ணன் மீண்டும் வம்பிழுக்க அவனை கதிர் அடிக்க ஒரு சண்டை வந்த நிலையில் ராஜி  மற்றும் அவரது பாட்டி ஒரு வழியாக இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ராஜி கதிரின் கையைப் படிக்க இருவருக்கும் லேசாக ரொமான்ஸ் ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது. இதனை அடுத்து அழிந்துவிட்ட கோலத்தை மீண்டும் போட கதிர் முயற்சி செய்யும் போது ராஜி அதை வேடிக்கை பார்க்கிறார்.



இந்த நிலையில் அங்கு வரும் மீனா, ராஜி - கதிர் ரொமான்ஸை பார்த்து ஆச்சரியப்பட்டு ’என்ன மனைவிக்காக நீங்களே கோலம் போடுகிறீர்களா? என்று கேட்க அது சும்மாதான் என்று கதிர் ஒருவழியாக சமாளித்தாலும் ராஜி நடந்ததை கூறுகிறார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட ரொமான்ஸ் குறித்து மீனா கேலி செய்ய, ராஜி அதெல்லாம் இல்லை எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூற , உடனே மீனா இவர்களைப் போலவே நாமும் செந்தில் உடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று காமெடியாக கூறும் காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் திடீரென தங்க மயிலின் அம்மா, அப்பா பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். நேற்று நடந்த காவல் நிலைய அலைச்சலால் மாப்பிள்ளை மிகவும் சோர்வாக இருப்பார் என்று அவருக்கு சூப் கொண்டு வந்திருக்கிறேன், நெஞ்சுக்கறி கொண்டு வந்திருக்கிறேன் என்று பில்டப் செய்ய பாண்டியன் அதை அப்பாவியாக நம்பி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

இதனை அடுத்து மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் தங்கமயில் அம்மாவுக்கு வீட்டை சுற்றிக் காட்டுகின்றனர். அப்போது இருவருக்கும் தனித்தனியாக ரூம் இருக்க சரவணனுக்கு மட்டும் ரூம் இல்லை என்பதை கேள்விப்பட்டு தங்கமயில் அம்மா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் மீனா அப்போது சமாளித்து திருமணம் ஆனவுடன் இருவருக்கும் ஏற்பாடு செய்வார்கள் என்று கூறுகிறார். இந்த காட்சியை பார்க்கும் போது  சிறகடிக்க ஆசை முத்து மற்றும் மீனாவுக்கு ரூம் இல்லாதது ஞாபகத்துக்கு வருவதாக சீரியல் பார்த்தவர்கள் கமெண்ட் அனைத்து உள்ளனர்.

இதனை அடுத்து மாப்பிள்ளைக்கு 10 பவுன் செயின், மூன்று பவுன் பிரேஸ்லெட் , ரெண்டு பவுன் மோதிரம் போடுவோம் என்று தங்கமயில் அம்மா அப்பா இருவரும் பில்டப் செய்து கொண்டே செல்ல அதெல்லாம் எதுக்கு உங்க இஷ்டம் போல் செய்யுங்கள் என்று பாண்டியன் மற்றும் கோமதி கூறுகின்றனர்.

இதனை அடுத்து பாண்டியன் கல்யாண பத்திரிகை அடித்துக் கொண்டு வர அந்த பத்திரிகையை சாமி முன் வைத்து கும்பிட்டு விட்டு எல்லோரும் மாறி மாறி கல்யாண பத்திரிகை பார்க்கிறார்கள். கல்யாண பத்திரிகை ரொம்ப அழகாக இருக்கிறது என்று சிலர் சொல்ல, ராஜி மட்டும் ஒரு சிறு குறையை சுட்டிக் காட்டுகிறார். மேலும் கல்யாணத்திற்கு லீவு போடு என்று மீனாவிடம் பாண்டியன் சொல்ல, மீனா, செந்திலை முறைத்து பார்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது. 

Advertisement

Advertisement