• Dec 26 2024

கச்சிதமாக டீலை முடித்த பழனிச்சாமி.. ஈஸ்வரியை கடுமையாக கண்டித்த எழில்! கோபிக்கு செக்மேட்?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகியோர் சமையல் சாப்பாடு பற்றி பேசிக் கொண்டு இருக்க, அங்கு வந்த எழில், அமிர்தா கிட்ட என்ன கேட்டீங்க? குழந்தை விசயத்துல நீங்க தலையிட வேண்டாம். இனி என்ன என்டாலும் என்கிட்ட கேளுங்க என ஈஸ்வரியிடம் கடுமையாக சொல்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி, அமிர்தா இல்லாத கதை எல்லாம் எழில்ட சொல்லி இருக்கா, இத சும்மா விட மாட்டேன் என சொல்ல, ராமமூர்த்தி அவரை தடுக்கிறார். இது எல்லாம் உன் வளர்ப்பு தான் என பாக்கியாவுக்கும் திட்ட,  ஆமா நீங்க உங்க பையனுக்கு சொல்லி கொடுக்காதத கூட நான் என் பிள்ளைக்கு சொல்லி குடுத்து இருக்கன் என பதிலடி கொடுக்கிறார் பாக்கியா.


மறுபக்கம், கோபி கிச்சனில் செப் லீவு எடுக்கிறார். இதனால் அங்கு சமையலுக்கு ஆளு இல்லை என குழம்பம் ஏற்படுகிறது. அங்கு இருப்பவர்களுக்கும் சமைக்க தெரியவில்லை என ராதிகாவுக்கு கால் பண்ணி சொல்லவும், எனக்கு வேலை இருக்கு, ஆனா சரியா 12 மணிக்கு இங்க லஞ்ச் வரணும் என சொல்லி போனை வைக்கிறார் ராதிகா.

இதை தொடர்ந்து, பாக்கியா ரெஸ்டாரண்ட் பார்க்கிங்க்கு இடம் பார்க்க, அவர் 30 ஆயிரம் கேட்கிறார். ஆனாலும் பழனி 10 ஆயிரத்துக்கு தருமாறு கேட்கிறார். சரியென அவரும் இறுதியில் 10 ஆயிரத்துக்கு இடத்தைக் கொடுக்க ஒப்புக் கொள்கிறார். பாக்கியா, எழில் சந்தோஷமடைகிறார்.

இன்னொரு பக்கம், கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு இருக்க, அங்கு உள்ளவர்கள் தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வச்சாச்சு ஆனா சமைக்க தெரியாது என சொல்லிக் கொள்கிறார்கள். உடனே கோபி அம்மாவுக்கு கால் பண்ணி ஐடியா கேட்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement