• Dec 26 2024

முதல்முறையாக பாசத்தில் கண்கலங்கிய பாண்டியன்.. வெளுப்பாருன்னு நினைச்சா இப்படி செஞ்சிட்டாரே..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் கேஸை வாபஸ் வாங்கிவிட்டதால் பாண்டியனின் மூன்று மகன்களையும் போலீசார் விடுதலை செய்கின்றனர். இதையடுத்து வெளியே வந்து அனைவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் மட்டும் ஓவர் சீன் போட, அப்போது மீனா, ‘எங்கள் புருஷன்களையும் தான் போலீஸ் பிடிச்சாங்க, நாங்க எல்லாம் அமைதியா இல்லையா, நீங்க ஏன் இப்படி அழுகிறீர்கள், என்று கேட்க அதற்கு தங்கமயில் அம்மா ’நீ கல்நெஞ்சுக்காரி, ஆனால் என் மகள் அப்படி அல்ல’ என்று கூற அதற்கு மீனா முறைக்க அங்கே ஒரு டென்ஷனான சூழ்நிலை  உருவாகிறது.

இதையடுத்து ஒரு வழியாக பாண்டியன் தனது மூன்று மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர கோமதியிடம் நடந்ததை சொல்கிறார்கள். அப்போது கோமதி மூவரையும் ’நீங்கள் என்ன ரவுடியா? ஏன் இப்படி சண்டைக்கு செல்கிறீர்கள்? என்று கேட்க ’அப்பாவை அடிக்க வரும் போது சும்மா இருக்க முடியுமா என்று மூவரும் பதில் கூறுகின்றனர். அதனை அடுத்து சமாதானம் செய்த பாண்டியன் மூவரையும் குளித்துவிட்டு வாருங்கள், சாப்பிடலாம் என்று கூறி அனுப்பி வைக்கிறார். அப்போது மூன்று மகன்களும் ‘பொதுவாக அப்பா தான் நம்மை அடித்து வெளுப்பார், அம்மா சமாதானப்படுத்துவார், ஆனால் இன்று உல்டாவாக இருக்கிறது என்று கூற, ஒருவேளை குளித்துவிட்டு வந்தவுடன் வெளுப்பாரோ’ என்று மூவரும் பேசிக் கொள்கின்றனர்.



இந்த நிலையில் முத்துவேல், சக்திவேல் வீட்டில், நடந்த சம்பவம் குறித்த உரையாடல் நடக்கிறது. அப்போது முத்துவேல் சக்திவேல் ஆகிய இருவரும் மனைவியிடம் கோபப்பட முத்துவேலின் மனைவி இந்த பிரச்சனை எதனால் வந்தது, யார் மீது தவறு என்று விளக்கம் அளிக்கிறார். இறுதியில் சக்திவேல் ’இந்த பெண்களுக்கு நன்றியே இல்லை, பொண்டாட்டியாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் நம்ம பக்கம் இருக்க மாட்டார்கள், நாம் தான் விடிய விடிய அவர்களுக்காக உழைத்துக் கொட்டுகிறோம், ஆனால் அவர்களுக்கு நம்மீது எந்த பாசமும் இல்லை என்று கூறுகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் மற்றும் கோமதி உரையாடல் அடுத்ததாக நடக்கிறது. நீங்கள் அடிதடியில் இறங்கிய மகன்கள் மேல் கோபப்படுவீர்கள் என்று நான் நினைத்தேன், ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தீர்களே’ என்ற கோமதி கேட்க ’என்னுடைய பசங்க வம்புச்சண்டை இழுக்கவில்லை, ரோட்டில் போறவங்க வர்றவங்கள அடிக்கவில்லை, அப்பன் மீது கை வச்சவன அடிச்சிருக்காங்க, இதுக்கு சந்தோஷம் தான் படனும்,   எனக்கு ஏதாவது என்றால் என் மூன்று மகன்களும் என் பக்கம் நிற்கிறார்கள் என்று முதல்முறையாக அவர் நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீருடன் கூறுவதை பார்த்து கோமதியும்  பாசத்தில் கண்கலங்கி இருக்கும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement