• Dec 26 2024

சண்டை வந்ததும் ஒரு விதத்திற்கு நல்லதுதான்.. ராஜி - கதிர் இடையே ஆரம்பமான ரொமான்ஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில் தனது மகன்கள் குறித்து பெருமையாக கோமதியிடம்  பாண்டியன் கூறும் காட்சிகள், ராஜி மற்றும் கதிர் உரையாடும் காட்சிகள், செந்திலை மீனா கண்டிக்கும் காட்சிகள் மற்றும் ராஜியின் கோலத்தின் மீது வண்டியை ஏற்றும் அவரது அண்ணனிடம் கதிர் சண்டைக்கு போகும் காட்சிகள் ஆகியவை உள்ளன.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தனக்காக தன்னுடைய மூன்று மகன்களும் சண்டைக்கு சென்றது தனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் தனக்கு சொந்தக்காரர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை, தனது மூன்று மகன்கள் இருக்கிறார்கள் அது போதும் என்று கூறும் பாண்டியன், அதன் பின் மருமகள்கள் குறித்தும் பெருமையாக பேசுகிறார்.

இதனை அடுத்து ராஜி தலை வலிக்கிறது என்று கோமதியிடம் தைலம் வாங்கிச் சென்ற நிலையில் ’உனக்கு தலை வலிக்கிறது என்பதால் நீ கட்டிலில் படுத்துக்கொள், நான் தரையில் படுத்து கொள்கிறேன்’ என்று கதிர் கூற, இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் ஒருவருக்கொருவர் கோபப்படுவது போல் தெரிந்தாலும் தற்போது தான் ரொமான்ஸ் ஆரம்பிக்கிறது போல் தெரிகிறது.



அதேபோல் மீனா தனது கணவன் செந்திலிடம் ’நீ என்ன பெரிய ரவுடியா? எதற்காக போய் அவனை அடித்தாய்? உண்மையில் அடித்தாயா அல்லது அடி வாங்கிக் கொண்டு வந்தாயா? என்று கேலியாக சொல்ல, அவர்கள் இடையே நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமான காட்சிகளாக உள்ளது.

இதனை அடுத்து மறுநாள் காலை ராஜி கோலம் போடும் போது, அங்கு வரும் அவரது அண்ணன் கோலத்தை அழிக்கும் வகையில் பைக்கை விட, அதை பார்த்து ஆத்திரமடையும் கதிர், குமாரை அடிக்க இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை தடுக்கும் வகையில் ராஜி, கதிரின் கையை பிடித்துக் கொள்ள, சண்டை முடிந்ததும் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் ஏற்படும் காட்சிகளும் தெரிகிறது.

ஒரு விதத்தில் இந்த சண்டை நடந்தது நல்லது தான் என்றும் இந்த சண்டையின் மூலம் ஒட்டாமல் இருக்கும் கதிர் - ராஜி மனம் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement