• Dec 27 2024

இந்த சனியனை பார்த்தாலே இரிட்டேட் ஆகுது.. தங்கமயிலுக்கு குவியும் கண்டனம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் என்ற கேரக்டரில் அடுத்து வரும் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவுக்கு கேலி,  கிண்டல் மற்றும் கண்டனங்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும் காமெடியும் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் தங்கமயில் என்ற கேரக்டர் உள்ளே வந்த பிறகுதான் பாண்டியன் குடும்பத்தில் பலவித குழப்பங்கள் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு புரிந்தாலும் இன்னும் பாண்டியனுக்கு புரியவில்லை என்பதால் எப்போது தங்கமயிலால் பெரிய பிரச்சனை வரும் என்று இந்த சீரியலை பார்ப்பவர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வரும் நடிகை சரண்யா இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார் என்பதும் அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்றுமுன் அவர் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவின் பின்னணியில் ’ராயன்’ படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலும் இடம்பெற்றுள்ளது. சரண்யாவின் இந்த பதிவுக்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இவருக்கு பதில் வேறு யாரையாவது போட்டு இருக்கலாம் என்றும், சீரியலில் ராசி இல்லாத நடிகை என்றும், இவரை பார்த்தாலே இரிடேட் ஆகுது,  வர் ஆக்டிங் ஜென்மம் என்றும், பலவிதமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றும், அழகு கண்மணி டார்லிங் என்பது போன்ற பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement