• Dec 26 2024

மீனாவை சிக்கலில் மாட்டிவிட்ட பாண்டியன்.. இனி என்னென்ன நடக்கப்போவுதோ..

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய எபிசோடில் அம்மா மற்றும் மனைவி மீது கதிருக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்ற காட்சிகள், அதன் பிறகு அலுவலகத்திற்கு விடுமுறை போட சொன்ன பாண்டியன் குறித்து செந்தில் மற்றும் மீனா பேசும் காட்சிகள், இதனை அடுத்து தங்கமயில் வீட்டுக்கு பத்திரிகை கொடுக்க சரவணனை அனுப்ப முடிவு செய்யும் காட்சிகள் மற்றும் மீனாவின் வீட்டிற்கு மீனா மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சென்று பத்திரிகை கொடுக்கலாம் என்று முடிவு செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ’ சீரியலில் தற்போது சரவணன் கல்யாணம் குறித்த காட்சிகள் தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் யார் யாருக்கு பத்திரிகை வைப்பது என்ற லிஸ்ட் எடுக்கப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் தங்கமயில் வீட்டுக்கு சென்று பத்திரிகை யார் கொடுக்கலாம் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது தான் சரவணனை அனுப்பலாம் என்று முடிவு செய்கின்றனர். சரவணன் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தாலும் ’நான் எதுக்கு’ என்று கூற அனைவரும் சேர்ந்து நீங்கள் தான் போக வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர் ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து விரைவில் தங்கமயிலை சரவணன் சந்திக்கும் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் தான் மீனாவின் குடும்பத்திற்கும் பத்திரிகை வைக்க வேண்டும் என்று பாண்டியன் சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். எங்கள் குடும்பத்திற்கு பத்திரிகை வைக்க சென்றால் விபரீதம் நடக்கும் என்றும் அதனால் வேண்டாம் என்று கூற, அதற்கு பாண்டியன் ’அதெல்லாம் தப்பு, கண்டிப்பாக சொல்ல வேண்டிய முறைக்கு சொல்லித்தான் ஆக வேண்டும், நானும் கோமதியும் சென்று பத்திரிகை வைத்து வருகிறோம்’ என்று கூறுகிறார்.

அப்போது மீனா ’நீங்கள் சென்றால் ஏதாவது பிரச்சனை நடக்கும், நானும் அவரும் சென்று வருகிறோம் என்று கூற. ’அப்போது மட்டும் பிரச்சனை நடக்காதா? என கதிர் கேட்க, ’அது நடந்தால் பரவாயில்லை, ஆனால் அத்தை மாமாவுக்கு எந்த அவமானமும் நடக்க கூடாது என்று மீனா சமாதானம் சொல்கிறார். இதனை அடுத்து மீனா மற்றும் செந்தில் ஆகிய இருவரும் மீனாவின் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க டூவீலரில் சென்று கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

செந்தில் மற்றும் கதிரை பார்த்தவுடன் மீனாவின் குடும்பத்தினர் எப்படி ரியாக்ட் செய்வார்கள், இதனால் ஏதும் பிரச்சனை வருமா ,அந்த பிரச்சனை சின்னதாக முடியாமல் விபரீதம் ஏற்படுமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம். மேலும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவின் குடும்பத்தினரை காட்டி நீண்ட நாட்கள் ஆகியதால் அவர்கள் தற்போது ரீஎன்ட்ரி ஆக உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement