• Dec 26 2024

திருந்தாத தங்கமயில்.. போட்டு கொடுப்பதில் நம்பர் ஒன்.. லூசா? இல்லை அப்பாவியா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று கோமதி இடம் ராஜி, டியூஷன் விஷயத்தை மாமாவிடம் சொல்லுங்கள் என்று கூற, சந்தர்ப்பம் பார்த்து சொல்கிறேன் என்று கோமதி கூறுகிறார். அப்போது பாண்டியன் கடையில் ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் கோபமாக வர, இது சரியான சந்தர்ப்பம் இல்லை, பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்று கோமதி முடிவு செய்கிறார்.

இதனை அடுத்து அனைவரும் சாப்பிட உட்காரும்போது, இன்று உப்புமா தான் சாப்பாடு என்று கோமதி கூற, பழனி அதிருப்தி அடைகிறார். உப்புமாவை எல்லாம் யார் சாப்பிடுவார்கள்? நாம் எல்லோரும் புரோட்டா வாங்கி சாப்பிடலாமா? என்று கூற, பாண்டியன் கோபப்படுகிறார். அப்போது சமயம் பார்த்து கோர்த்துவிடும் வகையில் ’நான் சமைத்திருந்தால் விதவிதமாக சமைத்திருப்பேன், இன்று அத்தை சமைத்தார்கள்’ என்று கூற கோமதி அவரை கோபமாக பார்க்கிறார்.

இதனை அடுத்து ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு மொட்டை மாடியில் பழனி, சரவணன், செந்தில் ஆகியோர் கூடியிருக்க்கும்போது, ‘இன்று நாம் அனைவரும் புரோட்டா சாப்பிடுவோம், கதிரை வாங்கி வரச் சொல்லி இருக்கேன்’ என்று பழனி கூறுகிறார். அப்போது கதிர் புரோட்டா வாங்கிக் கொண்டு வர எல்லோரும் சாப்பிடுகின்றனர். அந்த நேரத்தில் மீனா மற்றும் ராஜி வர அனைவரும் பயந்து நிலையில், ஒன்றும் பயப்பட வேண்டாம், ஜாலியாக சாப்பிடுங்கள் என்று இருவரும் கேஷுவலாக எடுத்துக் கொள்கின்றனர்.



ஆனால் தங்கமயில் அந்த நேரத்தில் வந்து ‘இதெல்லாம் தப்பு, மாமா புரோட்டா சாப்பிடக்கூடாது என்று சொன்னதையும் மீறி சாப்பிடுகிறீர்கள், கடை பலகாரம் எல்லாம் சாப்பிடக்கூடாது’ என்று சொல்ல அப்போது ராஜி ’நீங்கள் தியேட்டருக்கு போன போது மட்டும் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டீர்களே, அதெல்லாம் வீட்டில் செய்ததா? என்று கூற அப்போது ’சரியான கேள்வி’ என்று மீனா சப்போர்ட் செய்கிறார்.

இதனை அடுத்து கோபமாக கீழே சொல்லும் தங்கமயில், சரியான நேரம் பார்த்து பாண்டியனிடம் மேலே எல்லோரும் புரோட்டா சாப்பிடுகிறார்கள் என்று போட்டுக் கொடுக்க பாண்டியன் வேலை வந்து எல்லோரையும் திட்டுகிறார்.

இதனை அடுத்து மறுநாள் காலை பாண்டியன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அப்போது தங்கமயில் வருகிறார். நான் கோயிலுக்கு போய் வருகிறேன் என்று சொன்ன, அவர் பேச்சுவாக்கில் ராஜி டியூஷன் எடுக்கிறார் என்று மீண்டும் போட்டுக் கொடுக்கிறார். இதனால் பாண்டின் ஆத்திரமடைய, ’அய்யோ நான் உளறி விட்டேனே, நான் ஒரு உளறுவாய்’ என்று தங்கமயில் கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

டியூஷன் விஷத்தை சொல்ல வேண்டாம் என ராஜி, மீனா, கோமதி சொல்லியும் பாண்டியனிடம் போட்டுக் கொடுத்து விட்டாரே,  தங்கமயில் அப்பாவி கேரக்டரா? லூசா? அல்லது வேண்டுமென்றே பிளான் பண்ணி போட்டு விடுகிறாரா? என்று இன்றைய எபிசோடு குறித்து பார்வையாளர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement