• Dec 26 2024

மீனாவின் முறைப்பில் பயந்து ஓடும் குமரவேல்.. செந்தில், கதிர் ஆச்சரியம்.. ராஜி மீது லவ் ஸ்டார்ட்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில்  பாண்டியனிடம் பேசுவதற்காக கோமதி வருகிறார். குறிப்பாக மீனா மற்றும் ராஜியின் பெருமைகளை குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கும்போது ’தங்க மயிலுக்கு என்ன குறைச்சல் அவளும் நல்ல பெண்தான்’ என்று பாண்டியன் கூறுகிறார்.

 இதனை அடுத்து கோமதி மீண்டும் சில விஷயங்களை பேச வரும்போது பாண்டியன் ’தனக்கு தூக்கம் வருவதாகவும் அப்புறம் பேசிக் கொள்ளலாம்’ என்றும் சொல்லி கோமதியை அனுப்பி வைத்து விடுகிறார். இதனால் கோமதி மன வருத்தத்துடன் செல்கிறார்.

இந்த நிலையில் இரவு 11 மணி ஆகிவிட்டது போதிலும் கதிர் வரவில்லை என்று ராஜி பதட்டத்தில் இருக்க, பழனி மாமா ’போன் செய்கிறேன்’ என்று கூறுகிறார். அப்போது கதிர் வந்த நிலையில் பாண்டியன் அந்த பக்கம் வந்து, கதிரை பயங்கரமாக திட்டுகிறார். ‘இது என்ன சத்திரம் சாவடியா? நினைத்த நேரத்திற்கு வந்து போக, பத்து மணிக்குள் வரவில்லை என்றால் கதவை பூட்டி விடுவேன்’ என்று சொல்ல, கதிரும் அதற்கு எதிர்த்து பேச ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அதன் பிறகு கதிருக்கு ராஜி சாப்பாடு வைக்கும் காட்சி, இருவரும் ரொமான்ஸ் ஆக பேசும் காட்சி, ராஜி மனதை கதிர் புரிந்து கொள்ளும் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.



இதனை அடுத்து மறுநாள் செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் வொர்க்-அவுட் செய்து கொண்டே  மீனா மற்றும் ராஜி குறித்து பேசுகின்றனர். ’அப்பாவே பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தால் கூட இப்படி நமக்கு தங்கமான மனைவிகள் கிடைத்திருக்க மாட்டார்கள்’ என்று செந்தில் கூற கதிரும் அதை ஆமோதிக்கிறார். அப்போது எதிர் வீட்டில் உள்ள ராஜியின் அண்ணன் குமரவேல் வர, இருவரும் வொர்க்-அவுட் செய்வதை பார்த்து யாரிடமோ போன் பேசுவது போன்ற கேலி செய்கிறார்.

முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் செந்தில் மற்றும் கதிர் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை, கொசுவை அடித்து விடலாமா’ என்று பேசும்போது, மீனா மற்றும் ராஜி அங்கு வருகின்றனர். அப்போது மீனா குமரவேலை பார்த்து முறைக்க, குமரவேல் பயந்து உள்ளே சென்று விடுகிறார். அப்போது செந்தில் ’என்ன உங்கள் இருவரை பார்த்தவுடன் பயந்து ஓடுகிறான்’ என்று சொல்ல ’எங்களைப் பார்த்து எல்லாம் அவர் ஓடவில்லை, நாங்கள் என்ன ரவுடியா? என்று மீனா சொல்ல, அதற்கு ராஜி ஒரு காரணத்தை சொல்கிறார். இதனை அடுத்து செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் மீண்டும் தங்கள் மனைவியை நினைத்து பெருமைப்படுவதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் ராஜி மீது கொஞ்சம் கொஞ்சமாக கதிருக்கு லவ் ஸ்டார்ட் ஆவதால் இனிவரும் எபிசோடுகள் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement