• Dec 26 2024

சமந்தாவின் அடுத்த ஜோடி இந்த பாலிவுட் நடிகரா? கசிந்த திருமண தேதி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தாவின் அடுத்த ஜோடி பிரபல பாலிவுட் நடிகை நடிகர் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா பாலிவுட் திரையுலகில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் நடித்து வரும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சல்மான் கான் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிக்கந்தர்’ திரைப்படத்திலும் சமந்தா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது முழு குணம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் என்பதும் அவர் கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தா திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். சமந்தா தனது கணவரை விட்டு பிரியும் போது கோடிக்கணக்கில் அவருக்கு ஜீவனாம்சம் தர நாக சைதன்யா குடும்பம் தயாராக இருந்த போதிலும் ஒரு ரூபாய் கூட அவர் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.



இந்த நிலையில் பாலிவுட்டில் உருவாக இருக்கும் ஒரு புதிய வெப் தொடரில் சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.’தி ஃபேமிலி மேன்’ என்ற என்ற வெப் தொடரை இயக்கிய ராஜ் & டிகே தான் இந்த தொடரை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ’தி ஃபேமிலி மேன்’தொடரிலும் சமந்தா தான் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா நடிக்கும் புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஆதித்யா ராய் கபூர் மற்றும் சமந்தா திருமணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் வரும் 15ஆம் தேதி இந்த திருமண படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆதித்யா ராய் கபூர் கபூர் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement