• Dec 26 2024

விபரீதமான பூனம் பாண்டேயின் விழிப்புணர்வு நாடகம்! 5 ஆண்டு சிறை தண்டனை கன்ஃபார்ம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இளம் நடிகையான பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாக, அவரது குழுவினர் தெரிவித்த செய்தி, இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

எனினும், அடுத்த நாளே தான் உயிருடன் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் அவர் கூறுகையில், இந்த புற்றுநோயின்  அழிவுகரமான தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது உயிரிழப்பு செய்தி பரப்பப்பட்டது என்று பூனம் பாண்டே கூறி இருந்தார்.


இந்த நிலையில், தான் இறந்து விட்டதாக தவறான செய்தியை பரப்பிய பூனம் பாண்டேவிற்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


அதன்படி, 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நிட்ப சட்டத்தின் பிரிவு 67ன் படி, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை என கூறப்படுகிறது. 

மேலும், குற்றம் சுமத்தபடும் நபர், 5 முதல் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த நிர்பந்திக்கப்படும் வகையிலும் அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement