• Dec 27 2024

விஜய் டிவி சீரியலில் ஊறுகாயான முத்து, மீனா..! இப்ப இவங்க தான் ட்ரெண்டிங்காம்..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி பேசப்பட்டு வருகின்றது.

அதற்கு காரணம் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பெற்றதும் தான். இதுவரையில் சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடங்களையும் பெற்று வந்த நிலையில், தற்போது முதன் முறையாக விஜய் டிவி சீரியல் அவற்றை தகடு பொடியாக்கி நான்காம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் மீனாவும் முத்துவும் ஊறுகாயாக போய் உள்ளார்கள் என ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.


அதாவது தற்போது கடந்த வாரம் இடம்பெற்ற எபிசோட்களின் படி ஸ்ருதியும் ரவியும் முதலாவது ஹீரோ ஹீரோயினாக காணப்படுவதாகவும் இரண்டாவதாக மனோஜம் ரோகிணியும் உள்ளதாகவும் மூன்றாவது இடத்தில் மாங்காய் மற்றும் தேசிக்காய் ஊறுகாயாக முத்துவை மீனாவும் காணப்படுவதாக கூறியுள்ளார்கள்

இதேவேளை தற்போது ரோகிணி, மனோஜ் 30 லட்சங்களை பெற்று வீட்டில் அடக்கி வாசித்து வரும் நிலையில், 15 லட்சம் கிடைத்ததற்காகவே ரோகினியை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார் விஜயா. ஆனாலும் இந்த உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement