• Dec 25 2024

அமரன் பட இயக்குனரை கரெக்ட் பண்ணிய தனுஷ்! D55 பூஜையோடு வெளியான புகைப்படங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாது இயக்குனராகவும் அவதாரம் எடுத்து ஒரு சில படங்களை இயக்கி வருகிறார். இயக்குவதோடு அந்த படத்தில் தானே நடித்தும் வருகிறார். இப்படி இவர் இயக்கிய இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டும் இன்று வெளியானது இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்தின் பூஜை சைலெண்டாக நடந்துள்ளது.  


நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு D55 என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெற்றி திரைப்படமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படத்தினை இயக்கி இருந்தார். இது தீபாவளி முன்னிட்டு ரிலீசானது. இது வசூல் ரீதியில் பட்டையை கிளப்பி வருகிறது. 


இந்நிலையிலே ராஜ்குமார் பெரியசாமியுடம் கூட்டணி வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. D55 திரைப்படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் தொடர்பான அப்டேட் இனிவரும் களங்களில் படக்குழுவினால் அறிவிக்கப்படும். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 


Advertisement

Advertisement