• Dec 26 2024

பூர்ணிமா கூட பேசவேயில்லை... பிரதீப் தான் உறுதியான போட்டியாளர்... சொன்னமாதிரி பட்டாசு வெடிச்சன்... Vishnu 1st Time Live After Bigg Boss

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த விஷ்ணு நன்றாக விளையாடி முதல் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார். இந்நிலையில் இறுதி 6 போட்டியாளர்களின் ஒருவராக இருந்த இவர் 5 வது ரணராகவே ஆகா முடிந்தது. தற்போது முதல் முறையாக பிக் பாஸ் விட்டு வந்த பின்னர் நேரலையில் மக்களுடன் பேசியுள்ளார்.


"பிக் பாஸ் விட்டு வந்த பிறகு ரொம்ப சந்தோசமா இருக்கு பிக் பாஸ் போறதுக்கு முதல்லையும் போயிட்டு வந்த பிறகும் நிறைய வித்தியாசம் இருக்கு.  நிறைய பேர் விஷ்ணு , விஷ்ணு என்று சொல்லுறாங்க அதுதான் முதல்ல சந்தோசமா இருக்கு. அதையும் தாண்டி "ஏன்டா டேய்"னு போடும் போது இன்னும் ஹாப்பியா இருக்கு".


"அந்த வீட்டுக்குள்ள எல்லாரும் உண்மையைத்தான் இருந்தாங்க பொய்யா இருந்தாங்க என்று சொல்ல முடியாது. ஏன்டா டேய்னு சொல்லுறது மக்கள் மத்தியில பொய் சேர்த்து இருக்கு அதும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு. வெளிய வந்த பிறகு இன்னும் பூர்ணிமா கிட்ட பேச இல்லை ஏன்னா தெரிஞ்சியிருக்கும் சில விடையங்கள் உள்ள நடந்த முரண்பாடுகள் வெளிய வந்தும் பேசி பார்க்கறதுக்கு தடவை இல்ல பாப்போம் பிறகு" என்று கூறியுள்ளார்.


மேலும் நான் உள்ள போன உடனே உறுதியான போட்டியாளராக பார்த்தது பிரதீப் தான். அப்புறம் மாயா வையில் கார்ட் வந்த பிறகு தினேஷ், விசித்ரா, அர்ச்சனா இவங்கதான். எனக்கு புடிச்ச போட்டியாளர்னா மணி, ரவினா, அர்ச்சனா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் அண்ணா அவ்வளோதான். நான் இப்ப எல்லாம் கோவப்படுறதே இல்ல. 


நான் சொன்ன மாதிரி பட்டாசு எல்லாம் வெடிச்சிட்டன்,  மக்கள் எல்லாரும் ஹாப்பியா இருந்து இருப்பாங்கன்னு நினைக்கிறன். ரவீனா, மணி இப்படி கொஞ்சம் பேர் கிட்ட பேசுனன் ப்ராவோ கூடத்தான் இப்போ எல்லாம் சுத்திட்டு இருக்கன். பிக் பாஸ் வீட்டுல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இதுவரைக்கும் என்ன பிக் பாஸ் வீட்டுல இருக்கிறதுக்கு சப்போட் செய்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.    

Advertisement

Advertisement