• Dec 26 2024

விவாகரத்து ஆனது ஆனா இப்போ எல்லாரும் ஒன்னா தான் இருக்கோம்... தனது முதல் மனைவி குறித்து ஓபனாக கூறிய சரத்குமார்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர். கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பின் சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார்.


அண்மையில் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடிப்பது, பிட்டாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்வது என ஆக்டீவாக இருக்கிறார் சரத்குமார்.

1984ம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார் சரத்குமார், இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர், பின் சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.


அண்மையில் சரத்குமார் ஒரு பேட்டியில், கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார். வரலட்சுமி அம்மாவை விவாகரத்து செய்தபோதும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.


வரலட்சுமியிடமும் நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. தற்போது நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம், எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.


ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement