• Dec 26 2024

டாஸ்க்கில் ஜெயித்து பிக்பாஸ் வீட்டாரை அலற வைத்த ஸ்மோஸ் ஹவுஸ் வீட்டினர்- உருவகேலி செய்த பூர்ணிமா

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அவருக்கு ரெட் கார்டு கொடுத்த பெண் போட்டியாளர்களுக்கு எதிராக விசித்ராவும், அர்ச்சனாவும் களமிறங்கியதால், இருதரப்புக்கும் இடையே நேற்று முழுக்க வார்த்தை மோதல்கள் வெடித்தன. இந்த பிரச்சனையால் ஸ்மால் ஹவுஸ்மேட்ஸை பழிவாங்க முடிவெடுத்த மாயா, அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்.


தொடர்ந்து இன்றும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் மீதுள்ள கடுப்பில் அவர்களை டாஸ்கில் ஜெயித்து வச்சு செய்ய உள்ளதாக மாயா நேற்றே கூறி இருந்தார்.குறிப்பாக வீடு சுத்தம் செய்யும் டாஸ்க்கில் ஜெயித்தால் அவர்களை வேலை வாங்கி டார்ச்சர் செய்ய உள்ளதாக  பேசினார். 

ஆனால் இன்று நடைபெற்ற கிளீனிங் டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றிபெற்று விட்டனர். இதனால் மாயா போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது. இந்த டாஸ்க்கில் தோற்ற பின்னர், வீட்டில் உள்ள தன்னுடைய கேங்கிடம் பேசிக்கொண்டிருந்த மாயா, அவர்கள் லக்கில் ஜெயித்துவிட்டதாக கூறி தன் மனதை தேற்றிக்கொண்டார். 


மறுபுறம் பூர்ணிமா, ஜெயித்ததும் அர்ச்சனாவின் வாயை பார்த்தியா என கேட்டு உருவகேலி செய்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன அடி கொஞ்சம் ஓவரோ என கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement