• Dec 25 2024

பிக் பாஸ் விட்டு வெளியேறிய பின் பிரதீப் போட்ட முதல் பதிவு... டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிய பிரதீப் ஆண்டனி தற்போது ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 


பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். நேற்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது. பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.


இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள்.நடிகர் கவின், தொகுப்பாளினி பிரியங்கா போன்ற நட்சத்திரங்கள் இந்த முடிவு சரியில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது டுவிட்டரில் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வாங்கிய "நான் பெற்ற கோப்பைகள்" என அதனை படமெடுத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.   


Advertisement

Advertisement