• Dec 26 2024

44 வயது பிரேம்ஜிக்கு 20 வயதில் மணப்பெண்ணா? என்ன கொடுமை சரவணன் இது..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுக்கு அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளதாகவும் 44 வயதுக்கு மேலாகும் பிரேம்ஜியை திருமணம் செய்ய போகும் பெண்ணுக்கு 20 வயது தான் ஆகிறது என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரனுக்கு தற்போது 44 வயதாகும் நிலையில் அவருக்கு விரைவில் பெண் பார்த்து திருமணம் முடிக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீப காலமாக கூறிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென பிரேம்ஜி அமரனின் தாயார் காலமானார் என்பதும் சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் என்பதால்  பெண் பார்க்கும் படலம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.



இந்த நிலையில் பிரேம்ஜி அமரனுக்கு பெண் ஒருவர் கிடைத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு வெறும் 20 வயது மட்டுமே என்றும், இருப்பினும் அவர் திருமணத்திற்கு சம்பந்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி இணையதளங்களில் வெளியாகிய நிலையில் பிரேம்ஜி ஒரு திரைப்படத்தில் பேசிய வசனமான ’என்ன கொடுமை சரவணன்’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு பெண்ணை தான் காதலிப்பதாக பிரேம்ஜி அமரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் அதன் பின்னர் அந்த காதல் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இந்த நிலையில் குடும்பத்தினர் பார்த்த, தன்னை விட 24 வயது குறைந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement